கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம்

கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம் பொன் தீபங்கர் கிருஷ்ணமூர்த்தி M.A (தில்லி பல்கலை) +91-9442353708 English: https://konguhistory.blogspot.com/2007/09/kongunadu-history-of-rulers-from-3102bc.html கொங்கதேச ராசாக்கள் புத்தகம்: https://drive.google.com/file/d/0Bw1y0WMCXiSRcDd2cEhYQjVuNkU/view?usp=sharing அ.இதிகாச-புராண காலம்: எனது தாத்தாவை பழமையான பாண்டி மோடா,கற்களைப் பற்றிக் கேட்ட போது,அவர் கூறியவை: 1. குள்ளமான ஒரு மனித இனம் நமக்கு முன் வாழ்ந்தது.அவர்களை "கூளை பாண்டி", அதாவது குள்ளமான பண்டைய மக்கள் என்று அழைத்தனர். 2. பழைமையான இம்மனிதர்களின் ஆண்கள் அளக்கும் "படி" அளவே இருந்தனாராம்.பாண்டிச்சிகள் என்ற இவர்களது மனைவிகள் "புடி" அளவு இருந்தனாராம். 3. பெருங்கற்கால படிமங்களைப் பார்க்கையில் மூன்று அடி உயரமே கொண்ட கல் வீடுகளில் இருந்துள்ளனர். 4. சோளத்திற்கு சொறை,அதாவது பதரை இவர்கள்தான் போட்டனர் அதாவது சோளத்தை சாகுபடி பயிராக்கியவர்கள் இவர்கள்தான். 5. மிக கர்வம் கொண்டவர்கள் ஆதலால் ஈசுவரனை மதியாமல் இருந்தனர்.ஆதலால் இறைவன் மண்மாரி பெ...